இன்னும் 2 மாதங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்- ரணில்

17928 0

இன்னும் இரண்டு மாதங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது மெகா சதொச நிலையம் இன்று (05) வெலிசரையில் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மதஅலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக எதிர்பாராத விதமான பொருட்களின் விலை அதிகரித்தது. நாட்டின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றமே இந்நிலைக்குக் காரணமாகியது.

2018 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஊடாக பாரிய பொருளாதார  முன்னேற்றத்தை நோக்கி  அரசாங்கம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அரசாங்கம்  அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுத்தது. நியாயமான விலைக்கு அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கும் கொள்கையில் இருந்து அரசாங்கம் விலக வில்லையெனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment